எழுத்தர் பணி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனதாக போஸ்டர்; விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ்

எழுத்தர் பணி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனதாக ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து விளக்கம் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2021-07-15 18:02 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் பெருங்கடமனூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிவதற்காக எழுத்தர் பணிக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட கலெக்டரால் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த அறிவிப்பின் அடிப்படையில், அதே ஊரைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு பணியை வழங்கலாம் என பெருங்கடம்பனூர் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில் ஊராட்சி எழுத்தர் பதவி 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக அப்பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் வேலை வழங்காமல் பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியிருப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விளக்கம் கேட்டு நாகை மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்