தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி வழங்கும்: பா.ஜ.க. மாநில தலைவர் உறுதி

தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் என பா.ஜ.க. மாநில தலைவர் உறுதிப்பட கூறியுள்ளார்.

Update: 2021-07-24 22:48 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.  இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.   அதற்கு முன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
பா.ஜ.க. ஆன்மீகத்தினை அடிப்படையாக வைத்து வளர்ந்து வருகிறது. அண்ணாமலையார் கோவிலுக்கு யானை பெற்று தருவதற்கு எங்களுடைய கட்சி குரல் கொடுக்கும்.  மத்திய அரசு தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாகவே கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் 41 லட்சம் தடுப்பூசி தருவதாக தெரிவித்து, 52 லட்சம் வழங்கியிருக்கிறது. தற்போது 70 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தருவதாக தெரிவித்துள்ளனர். யயஅதைவிட கூடுதலாகவே தருவார்கள் என கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேலை செய்து வருகிறது. நாங்களும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் பயன்படுத்துகிறோம். எனவே, மக்களுக்கு இருக்கிற வலி எங்களுக்கும் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்