தனியார் இணையதளங்கள் மூலம் பஞ்சாமிர்தம் விற்கப்படுவதில்லை - பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

தனியார் இணையதளங்கள் வாயிலாக பஞ்சாமிர்தம் விற்கப்படுவதில்லை என்று பழனி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.;

Update:2026-01-05 19:52 IST

கோப்புப்படம் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்பு கோவில் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், அடிவாரம், பழனி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் உள்ளன.

மேலும் கோவில் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு தபால் வழியாக பஞ்சாமிர்தம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தக இணைய தளத்தில் பழனி கோவில் பஞ்சாமிர்தம் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து தற்போது கோவில் நிர்வாகம் சார்பில், அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், தனியார் இணையதளங்கள் வாயிலாக பஞ்சாமிர்தம் விற்கப்படுவதில்லை. எனவே கூடுதல் தொகை கொடுத்து ஏமாற வேண்டாம். கோவில் விற்பனை நிலையத்தில் நேரடியாக பக்தர்கள் வாங்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்