ஐபிஎஸ், ஐஎப்எஸ் ஆக உருவாக லேப்டாப் உதவியாக இருக்கும் - உதயநிதி ஸ்டாலின்

திராவிட இயக்கம் ஓர் அறிவு இயக்கம். காணொளி அழைப்பு குறித்து அன்றே பெரியார் சொன்னார் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;

Update:2026-01-05 20:31 IST

சென்னை,

’உலகம் உங்கள் கையில்’ நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அரசு வழங்கும் லேப்டாப் மாணவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் கேம் சேஞ்சராக இருக்கும்; லேப்டாப், இணையதளம், புதுமைகளை உருவாக்கும் எண்ணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் கல்விதான் யாராலும் அழிக்க முடியாத, பறிக்க முடியாத சொத்து என முதல்-அமைச்சர் அடிக்கடி சொல்வார்.

ஐபிஎஸ், ஐஎப்எஸ் ஆக உருவாக இந்த லேப்டாப் உதவியாக இருக்கும், அரசு பள்ளிகளில் படித்தவர்கள் கூகுள், மைக்ரோசாப்டில் வேலை செய்கின்றனர்.1946ம் ஆண்டு வீடியோ கால் குறித்து பெரியார் பேசியுள்ளார், தகவல் தொழில்நுட்பத்திற்கு திமுக தான் அடித்தளமிட்டது.

எதிர்காலத்தில் தூரத்தில் உள்ள மனிதர்கள் முகம் பார்த்து பேசிக்கொள்ளும் கருவி வரும். ஒரு இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் கல்வி கற்கும் சூழல் வரும் என சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு 'இனி வரும் உலகம்' என்ற உரையில் பெரியார் சொன்னார். அவர் அன்று சொன்னதெல்லாம் இன்று அறிவியல் கருவிகளாக நம் கையில் கிடைத்துள்ளன.

"கல்வி வளர்ச்சியில் முக்கிய நாள்” தமிழக கல்வி வளர்ச்சியில் இது முக்கியமான நாள்;.திராவிட இயக்கம் ஓர் அறிவு இயக்கம்; காணொளி அழைப்பு குறித்து அன்றே பெரியார் சொன்னார் அரசுப் பள்ளிகளில் பயின்ற பலரும் உலகின் முன்னணி நிறுவனங்களில் உள்ளனர். பல மயில்சாமி அண்ணாதுரைகளை உருவாக்க வேண்டுமென்று லேப்டாப் திட்டத்தை முதல்-அமைச்சர் அளிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்