10 லட்சம் மாணவ - மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்;
சென்னை,
உலகம் உங்கள் கையில் எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக ம்டிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மடிக்கணினி வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி பேசியதாவது:-
தமிழர்களான நாம், எப்போதும் கடந்த கால பெருமைகளைப் பேசுவோம். எதிர்காலப் பெருமைகளுக்காக உழைப்போம். ஆனால், ஒருபோதும் போலியான பெருமைகளைப் பேசிக்கொண்டு தேங்கிவிட மாட்டோம். உலகமே உங்கள் கையில் தான் உள்ளது என்பதே உண்மை. திறனும், பகுத்தறிவும், அறீவியல் பார்வை இணைந்து செயல்பட்டாலே புதுப்புது கண்டுபிடிப்பு வரும். பழைய பெருமையுடன் எதிர்கால திட்டத்தையும் பேசுவோம். 25 ஆண்டு முன்பே இனி கணினி காலம் என உணர்ந்து தொழில்நுட்பக்கொள்கையை கொண்டுவந்தார் கலைஞர்.
திராவிட இயக்கம் அறிவு இயக்கம், அறிவுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கம். மாணவர்களை வளர்க்கவே, நான் முதல்வன் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும், நாடு வளரும். உலகம் உங்கள் கையில் என்பது வெறும் தலைப்பு கிடையாது. அதுவே உண்மை.அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்ப்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு உடனே கிடைக்க செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திறன் வளர்ச்சி, டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றனர். 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும் நிலையில் முதல் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.