பிரேசில் நாட்டில் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக நியமனம்

பிரேசில் நாட்டில் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக நியமனம்.

Update: 2021-07-25 02:48 GMT
சென்னை,

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரியாக ஹோமநாதன் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் பிரேசில் நாட்டில் இந்திய தூதரகத்தில் செயல்பாட்டுத் தலைவராக பணியாற்றி வந்த எஸ்.கோவேந்தனை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்து உள்ளது. இந்தநிலையில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக எஸ்.கோவேந்தன் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் பதவி ஏற்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (சுரங்கம்) பட்டம் பெற்ற இவர், மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தேர்வில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2009-ம் ஆண்டு இந்திய வெளியுறவு துறையில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். டெல்லியில் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்த இவர், லிஸ்பன், பூட்டான் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் போர்த்துகீசியம் ஆகிய மொழிகளை சரளமாக பேசும் திறமை கொண்டவர். பயணம், விளையாட்டு, கிரிக்கெட் மற்றும் வாசித்தல் மற்றும் விளையாடுவது ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.

மேற்கண்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்