அ.தி.மு.க. ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் பற்றி விசாரணை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

அ.தி.மு.க. ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் வழங்கியது பற்றி விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2021-07-25 19:31 GMT

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில், கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு 5,300 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  இதில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நாடா துணியினால் தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இதனை அணிவதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்கு இதுவரை ரூ.5 கோடி வந்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தினை வரும் புதன்கிழமை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார் என கூறியுள்ளார்.



மேலும் செய்திகள்