ஆகஸ்டு 15-ந்தேதி முதல் முறையாக கோட்டை கொத்தளத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார்

சென்னையில் உள்ள கோட்டையில் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலாக தேசிய கொடியை ஏற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2021-07-26 02:19 GMT
சென்னை,

சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார். இதனையொட்டி பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும் பகுதிகளில் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் விழா நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளது.

பிரமாண்ட மேடை

நிகழ்ச்சிகளை பார்வையிடும் வகையில் அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதியாக கோட்டை கொத்தளத்தின் எதிரே 3 பிரமாண்டமான மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

ஒத்திகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சியையொட்டி விரைவில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுதந்திரதின நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா காலமாக இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்