உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக இன்று ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் குறித்து 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

Update: 2021-08-11 02:52 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தபடவில்லை.

இந்த நிலையில், செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதனால் தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான கட்சிகளும் தமது பணிகளை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்