சுதந்திரத்துக்காக போராடிய எல்லா தலைவர்கள் பெயர்களும், தமிழக அரசு தயாரிக்கும் ஆவணத்தில் இடம் பெற வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-08-16 22:45 GMT
இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது கண்டிப்பாக செய்ய வேண்டிய பணி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அதில் எந்த தலைவரின் பெயரும் விடுபடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம் ஆகும்.

எனவே தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட உள்ள வரலாற்று ஆவணத்தில் விடுதலைக்காக போராடிய அனைத்து தலைவர்களின் பங்களிப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களில் மாயூரம் நாகப்பன் படையாச்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் உள்ளிட்ட எந்தெந்த தலைவர்களுக்கு எல்லாம் தமிழ்நாட்டில் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லையோ, அவர்கள் அனைவருக்கும் நினைவிடங்கள், உருவச்சிலைகள் போன்றவற்றை அமைத்து அவர்களை பெருமைப்படுத்துவதற்கும் அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்