அனைத்துலக தமிழர் கல்விப்பேரவை வெளியிட்ட தமிழ் பாடப்புத்தகங்களில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது

அனைத்துலக தமிழர் கல்விப்பேரவை வெளியிட்ட தமிழ் பாடப்புத்தகங்களில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது சீமான் குற்றச்சாட்டு.

Update: 2021-08-24 19:22 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், ‘அனைத்துலகத்தமிழர் கல்விப்பேரவை’ எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் குழந்தைகளுக்கான தமிழ்ப்பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு திரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களின் வரலாற்றைத் திரித்துக்கூறுவதன் மூலம் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தி, அவர்களது தாயகப்பற்றையும், இன உணர்வையும் மழுங்கடிக்கச்செய்யும் வஞ்சகச்செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.

தமிழினத்தின் பழம்பெருமையையும், பெரும்புகழையும் பறைசாற்ற வரலாற்றுச்சான்றுகள் இல்லாது இலக்கியச்சான்றுகளே தரவுகளாக இருப்பது எந்தவொரு இனத்திற்கும் நேர்ந்திடக்கூடாப் பெருந்துயரமாகும். புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக ஒரு சில அமைப்புகளால் பாடநூட்கள் எனும் பெயரில் திட்டமிட்டு செய்யப்படும் அவதூறு பரப்புரைகளையும், உள்நோக்கத்துடனான பொய்யுரைகளையும் தடுத்து முறியடித்து, தமிழர்களின் மெய்யான வரலாற்றை நிலைநிறுத்த துணைநிற்க வேண்டுமென உலகத்தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்