பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-02 05:47 GMT
சென்னை

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ  செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மனத்தின் மீது பேசிய முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கூறியதாவது:-

பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. பொருளாதார நலனுக்கும், சிறு,குறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என கூறினார்.

மேலும் செய்திகள்