விஜயகாந்துக்கு சிகிச்சை: பாஸ்போர்ட் திருப்பி கொடுக்கப்பட்டதால் பிரேமலதா துபாய் சென்றார்

பாஸ்போர்ட் திருப்பி கொடுக்கப்பட்டதால் விஜயகாந்த் சிகிச்சைக்கு உதவியாக பிரேமலதா துபாய் புறப்பட்டு சென்றார்.

Update: 2021-09-03 19:19 GMT
ஆலந்தூர்,

தே.மு.தி.க. நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த 30-ந் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போது விஜயகாந்துடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் துபாய் செல்வதாக இருந்தது. ஆனால் பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக அவரால் கணவர் விஜயகாந்துடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

துபாய் சென்றார்

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பிரேமலதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கணவர் விஜயகாந்த் துபாயில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு உதவியாக இருக்க தான் துபாய் செல்ல வேண்டும். அதனால் தனது பாஸ்போர்ட்டை திருப்பித்தர வேண்டும் என கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி பிரேமலதாவிடம் பாஸ்போர்ட் திருப்பி கொடுக்கப்பட்டது.

இதையடுத்து பிரேமலதா நேற்று அதிகாலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றுக் கொண்டார். விஜயகாந்துக்கு மருத்து சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்