தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைவு: புதிதாக 1,556 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 1,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Update: 2021-09-06 14:26 GMT
சென்னை, 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,24,234 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18 பேர் (அரசு மருத்துவமனை 12, தனியார் மருத்துவமனை - 6) கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,036 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,564 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,72,942 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 16,256 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1,55,609 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

கோவை - 206, சென்னை - 169, ஈரோடு - 96, செங்கல்பட்டு - 110, திருவள்ளூர் - 73

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்