சென்னை விமான நிலையத்தில் அதிநவீன கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்காக 30 நிமிடத்தில் முடிவு வரும் அதிநவீன கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-07 07:11 GMT
சென்னை,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பட்டிப்படியாக குறைந்து வரும் நிலையில், உலக நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து தற்போது மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்பவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் அரை மணி நேரத்தில் முடிவு தெரியக்கூடிய அதிநவீன கொரோனா பரிசோதனை முறை பின்பற்றப்படுகிறது. இதற்கான கட்டணமாக ரூ.4,000 வசூலிக்கப்படு வந்த நிலையில், இந்த கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தற்போது சென்னை விமான நிலையத்தில் அதிநவீன கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.3,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்