பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-07 07:29 GMT
சென்னை

தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும். பத்திரிகையாளர்கள் மொழித்திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும்.

பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும். அரசின் நலதிட்டங்கள், அரசின் செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்ல சமூக ஊடக்கப்பிரிவு தொடங்கப்படும்.

சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுதொகை கொண்ட கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்