எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பிறந்த நாள் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-09 06:09 GMT
Image courtesy : @arivalayam
சென்னை

 மூத்த தலைவரும் எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் இன்று தனது 95 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

அரசியலில் மூத்த தலைவரான இவர், தி.மு.க. தலைவர்களுடனும்  நட்பு பாராட்டி வருகிறார்.

இதையடுத்து முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆர்.எம்.வீரப்பனுக்கு மாலை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். முதல்-அமைச்சருடன்  அமைச்சர் பொன்முடி, எம்.பி.க்கள்,ஜெகத்ரட்சகன் , டி.ஆர்.பாலு  உள்ளிட்டவர்களும் சென்றனர்.

மேலும் செய்திகள்