காரைக்காலில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

காரைக்காலில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 115 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-09-09 16:00 GMT
காரைக்காலில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 115 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா விற்பனை
காரைக்கால் அம்மன் கோவில்பத்து கிராமத்தில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததன்பேரில் காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், பிரவீன்குமார் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 115 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
4 பேர் கைது
விசாரணையில், அவர்கள், காரைக்கால் அம்மன் கோவில்பத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), பெலிக்ஸ் (24), வண்டிக்கார தெருவை சேர்ந்த அமீர்அலி (22), லெமேர் வீதியை சேர்ந்த நிகல் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். மேலும் 115 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கஞ்சா சப்ளை செய்தது யார்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா வியாபாரி சிக்கினார்
லாஸ்பேட்டை தாகூர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்த கஞ்சா வியாபாரி சந்தோஷ் (23) என்பவரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இரு்நது 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்