காரைக்கால் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து

காரைக்காலில் இருந்து கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ரங்கசாமியுடன் இலங்கை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-09-15 13:33 GMT
புதுச்சேரி
காரைக்காலில் இருந்து கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ரங்கசாமியுடன் இலங்கை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இலங்கை அமைச்சர் சந்திப்பு

கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை தாக்கி வருகிறது. சமீபத்தில் கூட காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்டனர்.
இந்த சூழலில் இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான செந்தில் தொண்டைமான், இலங்கை ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் நேற்று புதுவை வந்தனர். சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு

அப்போது இலங்கை-காரைக்கால் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டு நல்லுறவை வளர்ப்பது மற்றும் காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின்போது போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா, பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
====

மேலும் செய்திகள்