மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும்

மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு.

Update: 2021-09-20 22:03 GMT
சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்துவரும் செந்தில்பாலாஜி, கடந்த 2011-2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக செந்தில்பாலாஜி உள்பட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பின்பு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்துவருகிறது. நேற்று அந்த வழக்கு நீதிபதி ஆலிசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை.

அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக செந்தில்பாலாஜி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்