சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.

Update: 2021-09-21 05:10 GMT
சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,374-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.34,992-க்கு விற்பனையாகிறது.

அதைபோல வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்