தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-08 00:23 GMT
சென்னை,

இது குறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திகளார்களிடம் கூறியதாவது:-

வரும் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கையிருப்பில் 50 லட்சத்து 12 ஆயிரத்து 159 தடுப்பூசிகள் உள்ளது. இதுவரை மொத்தம் 25 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 100% பழங்குடியின மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்

தமிழகத்தில் விருதுநகரில் 88 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 83 சதவீதம் பேருக்கும், சென்னையில் 82 சதவீதம் பேருக்கும், மதுரையில் 79 சதவீதம், தேனியில் 75 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. 

மேலும், கரூர், நீலகிரி, அரியலூர், பெரம்பலூரில் மட்டும் 60 சதவீதத்துக்கும் குறைவான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சராசரியாக 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 4 மாவட்டங்களுக்கு தடுப்பூசி பணிகளை மேம்படுத்த அதிகமான அளவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்