பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிடத் தடை

பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிடத் தடை ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-10-11 18:49 GMT
சென்னை,

பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராகவன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘என்னைப் பற்றி கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி மதன் ரவிச்சந்திரன் என்பவர் ‘மதன் டைரி' என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவை முகநூல், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வெளியிடவும், அதுகுறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கவும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் குமார்பால் ஆர்.சோப்ரா ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட அக்டோபர் 8-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது. வழக்கை விசாரித்த நீதிபதி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை இந்த வீடியோவை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்