சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது.

Update: 2021-10-18 07:19 GMT
சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த 16-ந்தேதியில் இருந்து அதன் விலை தொடர்ந்து சரிந்து, ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. 

இந்நிலையில்,  சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ.4,442-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்