ஆந்திராவில் பெண் பயங்கரவாதி ஆயுதங்களுடன் போலீசில் சரண்

ஆந்திராவில் மாவோயிஸ்ட் அமைப்பச் சேர்ந்த பெண் பயங்கரவாதி ஒருவர், ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தார்.

Update: 2021-10-19 13:03 GMT
ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பில் இருந்து ஸ்வேதா என்ற பெண் வெளியேறியுள்ளார். அவர் விசாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணாராவ் முன்னிலையில் போலீசாரிடம் சரணடைந்தார். துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார்.

மாவோயிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன் என்பவர் இறந்ததை தொடர்ந்து, தான் சரணடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது சரணடைந்துள்ள ஸ்வேதா மீது 6 கொலை வழக்குகள் உள்பட 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவரை பிடித்துக் கொடுத்தால் 4 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்