வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம், 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-10-28 07:29 GMT

காஞ்சீபுரம்,


சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 26ந்தேதி 19 வயது பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது.  அந்த சிங்கம் வயது முதிர்வால் உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து நேற்று உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  மேலும், உயிரிழந்த சிங்கம் மற்றும் நெருப்பு கோழிகளின் பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும்.



மேலும் செய்திகள்