மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 795 கனஅடியாக இருந்தது.

Update: 2021-10-31 20:32 GMT
மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு அதிகபட்சமாக கடந்த 27-ந் தேதி வினாடிக்கு 37 ஆயிரத்து 162 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அதுவும் ஒருசில நாட்களிலேயே தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 795 கனஅடியாக இருந்தது. 

இது நேற்று வினாடிக்கு 13 ஆயிரத்து 172 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 109.70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.45 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருவதால், நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியை எட்டுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்