சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2021-11-25 01:23 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, வேளச்சேரி, அடையாறு, நீலாங்கரை, கந்தஞ்சாவடி, கொட்டிவாக்கம், தாம்பரம், பல்லாவரம், பொரூர், பெருங்குளத்தூர் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளும், அலுவலகம் செல்வோரும் சற்று சிரமமடைந்துள்ளனர்.  

மேலும் செய்திகள்