வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-25 03:12 GMT
சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்