தி.மு.க. எம்.பி., மீதான கொலை வழக்கு விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்காணிக்க வேண்டும்

தி.மு.க. எம்.பி., மீதான கொலை வழக்கு விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்காணிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-11-25 22:19 GMT
சென்னை,

கடலூர் தி.மு.க., எம்.பி., ரமேசுக்கு சொந்தமான முந்திரி நிறுவனத்தில் வேலை செய்த கோவிந்தராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எம்.பி., ரமேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ரமேசுக்கு கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. அதனால் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், கோவிந்தராஜ் கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடரலாம். அதேநேரம் அந்த விசாரணையை விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்