மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம்

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-11-26 00:15 GMT
சென்னை,

சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு இடையில், தற்காலிக கொரோனா கால விமான போக்குவரத்து ஏற்பாடு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்' என, மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரிக்கு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், மத்திய அரசின், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன், கொரோனா கால விமான போக்குவரத்துக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.

இதனால், அந்த நாடுகளில் வசிக்கும், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழகத்திற்கு வர விரும்பினால், நேரடி விமான சேவை இல்லை.  அவர்கள் துபாய், தோகா, கொழும்பு மார்க்கமாக மாற்று பாதையில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதுடன், அதிக விமான கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

இவற்றை தவிர்க்க, தற்காலிக விமான சேவைகளை வழங்க வசதியாக, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு இடையில், தற்காலிக கொரோனா கால விமான போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்