திரைப்பட விமா்சனங்களை தவிா்க்க பா.ஜ.க.வினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

திரைப்பட விமா்சனங்களை தவிா்க்கும்படி கட்சி நிா்வாகிகளை தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளாா்.

Update: 2021-11-28 22:47 GMT


சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவா் கே. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பாக கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை.

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவா்கள் பாா்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியை சேர்ந்த சகோதர, சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமா்சிக்க தொடங்கியுள்ளனா்.

கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் யாா் சொல்லும் கருத்தும், கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்போது எதற்காக பேச வேண்டுமோ அப்போது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிா்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.

நமது இலக்கு, நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்படுங்கள். எனவே, திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமா்சனங்கள் விவாதங்கள், கருத்துகளை கட்சி நிா்வாகிகள் தவிா்க்க வேண்டும் என கூறியுள்ளாா்.

மேலும் செய்திகள்