பனிமூட்டம்: உத்தரமேரூர் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

உத்திரமேரூர் அருகே கார் வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.;

Update:2022-01-06 15:56 IST
உத்திரமேரூர், 

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தன்னுடைய நண்பர் சரவணன் (வயது 27), மற்றும் பொன் குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 29) ஆகிய இரண்டு நண்பர்களை அழைத்துக்கொண்டு தன்னுடைய புதிய காரில் ஓரிக்கை செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெருநகர் சென்று கொண்டிருந்தபோது பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் எதிரில் வந்த வேன் மீது கார் நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் சுந்தரமூர்த்தி உட்பட காரில் பயணம் செய்த மூன்று பேர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வேனில் வந்த 13 பெண்கள் மற்றும் 3 ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்