சென்னையில் முக கவசம் அணியாத 5,666 பேர் மீது வழக்கு

சென்னையில் முக கவசம் அணியாத 5,666 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

Update: 2022-01-18 21:53 GMT

சென்னை,



தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஒமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது.  இதனை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முக கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீதும் போலீசார் கடந்த 2ந்தேதி முதல் தீவிரமாக வழக்கு பதிவு செய்து வருகின்றனா்.

இதுபோன்று கடந்த திங்கள்கிழமை முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி திரிந்த 5,666 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 33,200 அபராதமாக வசூலித்துள்ளனா்.

இரவு ஊரடங்கை மீறியது தொடா்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தொடா்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதோடு கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடா்பாக 175 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்