அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை; டி.ஜி.பி. எச்சரிக்கை

மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-01-20 16:37 GMT


சென்னை,


தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு விடுத்துள்ள அறிவிப்பில், மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம், லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு விதிகளின்படி முக்கிய நபர்கள், அதிகாரிகளை தவிர மற்றவர்கள் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது. சட்டங்கள் மீறப்படும்போது சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அரசு சின்னங்களை சாட்சியங்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும், காணொளியாக பதிவு செய்யவும் டி.ஜி.பி. அறிவுரை வழங்கியுள்ளார்.



மேலும் செய்திகள்