தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது.

Update: 2022-05-10 04:50 GMT
சென்னை,

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல கிராமுக்கு ரூ.19 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,840-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,000-க்கு விற்பனையாகிறது.

மேலும் செய்திகள்