கச்சத்தீவை மீட்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்- இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜி லிங்கம்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் தலைவர்களில் முக்கியமானவரும் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜி லிங்கம் கலந்துகொள்கிறார்.

Update: 2022-05-15 00:25 GMT
அதில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி போராட்டங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை குறித்து பேசுகையில் தற்போதைய நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களின் எதேச்சதிகார போக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ பலத்தை பெருக்க வாங்கிய கடன்களும்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் ராஜபக்சே சகோதரர்களுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் என்றும் மேலும் கடன்களையும் உதவிகளையும் பெற ரணில் விக்கிரமசிங்கேவை துருப்பு சீட்டாக அவர்கள் பயன்படுத்தக்கூடும் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு தமிழர்கள் நிம்மதியாகவும் கவுரவமாகவும் வாழ இந்தியாவின் 130 கோடி மக்களும் தனி ஈழம் அமைய தமிழர் பகுதியில் வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தமிழக மீனவர் நலனுக்கும் இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கச்சத்தீவை இந்தியா மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் தமிழக மீனவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு சிவாஜிலிங்கம் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்