மாமல்லபுரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 15 பேர் காயம்...!

மாமல்லபுரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில்15 பேர் காயம் அடைந்து உள்ளனர்.;

Update:2022-05-16 10:04 IST
மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்த காரும், கல்பாக்கம் நோக்கி சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ஆணந்தன்(40), அவரது மனைவி திவ்யா,(36), தாய் லட்சுமிகாந்தன் ஆகியோர் காயமடைந்தனர்.

மேலும் வேனில் பயணித்த கல்பாக்கம் , சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் 12 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து அறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்