தோப்பில் பதுக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரத்தில் தோப்பில் பதுக்கிய 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-23 18:15 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் தோப்பில் பதுக்கிய 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தோப்பில் பதுக்கிய கஞ்சா

ராமேசுவரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் மீனவர் ெஜனதன் (வயது 40) என்பவரை சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் இரவு தனிப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சமீபத்தில் ராமேசுவரத்தில் இருந்து ஒரு விசைப்படகில் 8 பேர் மீன் பிடிக்க சென்றதாகவும் அப்போது தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்தபோது கடலில் பார்சல் ஒன்று மிதந்து வந்ததாகவும் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பார்சலை எடுத்து கஞ்சா வியாபாரியிடம் கொடுப்பதற்காக தோப்பு ஒன்றில் பதுக்கி வைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

8 பேர் கைது

இதையடுத்து தென்னந்தோப்பில் கஞ்சா பார்சல்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 15 பார்சல்கள் கொண்ட 25 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெனதன் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று ராமேசுவரத்தை சேர்ந்த குணசேகரன்(36), இருளேஸ்வரன்(23), வெள்ளைச்சாமி(47), நம்பு ராஜன்(21), அந்தோணிராஜ்(41), சரவணன்(40், கிறிஸ்டோபர்(33) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்