250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் கடத்த இருந்த 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையில், போலீசார் வெங்கடேசன், ஸ்டாலின் ஆகியோர் அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வந்து செல்லும் ரெயில்கள், நடைமேடை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில் நிலைய 5-வது நடைமேடையில் சோதனையில் ஈடுபட்டிருந்து போது நடைமேடை அருகே 10 பைகளில் சுமார் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்த வைத்திருந்ததை பறிமுதல் செய்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்களை ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.