வடபழனியில் 3 கடைகளில் கொள்ளை - வாலிபர் கைது

வடபழனி ஆற்காடு சாலையில் 3 கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு கொள்ளை போனது.;

Update:2022-07-18 13:08 IST

போரூர்:

வடபழனி ஆற்காடு சாலையில் வணிக வளாகம் எதிரே கடந்த மாதம் மளிகை கடை, பெட்டிக் கடை உள்ளிட்ட 3கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு அங்கிருந்து ரூ. 8 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது.

வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அதே பகுதி அழகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ஷெரிப் (வயது 22) கைவரிசை காட்டியது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த ஷெரிப்பை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர் அவன் மீது ஏற்கனவே வடபழனி, விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்