டான்செட் தேர்வை 3,670 பேர் எழுதினர்

கோவையில் 5 மையங்களில் டான்செட் தேர்வை 3,670 பேர் எழுதினர்;

Update:2023-03-26 00:15 IST

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர 'டான்செட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கும் இந்த ஆண்டில் இருந்து பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை என்று அழைக்கப்படும் 'சீட்டா' நுழைவுத்தேர்வும் நடத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் எம்.பி.ஏ. படிப்புக்கு 623 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 3,292 பேரும் 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில் கோவையில் தடாகம் ரோடு, ஜி.சி.டி, பி.எஸ்.ஜி., அண்ணா பல்கலை மண்டல மையம், சி.இ.டி உள்பட 5 மையங்களில் 'டான்செட்' நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது.

இதில், நேற்று காலையில் நடைபெற்ற எம்.சி.ஏ. தேர்வை 3,077 பேர் எழுதினர். 215 பேர் எழுதவில்லை, மதியம் நடைபெற்ற எம்.பி.ஏ. தேர்வை 593 பேர் எழுதினர். 30 பேர் தேர்வு எழுத வர வில்லை. சீட்டா நுழைவுத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

மேலும் செய்திகள்