தமிழக அரசு சார்பில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் 4,600 பேர் - நாளை முதல் பயணம் தொடக்கம்

தமிழக அரசு சார்பாக நாளை முதல் ஜூன்‌ 9-ந்தேதி வரை 4,600 பேர் ஹஜ் புனித யாத்திரை செல்ல உள்ளனர்.

Update: 2024-05-25 13:08 GMT

சென்னை,

தமிழக அரசு ஹஜ் புனித யாத்திரைக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வதற்காக பதிவு செய்தனர்.

இந்நிலையில் நாளை முதல் ஜூன் 9-ந்தேதி வரை தமிழக அரசு சார்பாக 4,600 பேர் ஹஜ் புனித யாத்திரை செல்ல உள்ளனர். ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் தமிழக அரசு சார்பாக தலா ரூ.17,480 மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணி முதல் ஹஜ் யாத்திரை செல்பவர்கள் தமிழக அரசு சார்பாக வழி அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்