அரசு விரைவு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் - அமைச்சர் சிவசங்கர்
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி அரசு விரைவு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.;
சென்னை,
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி அரசு விரைவு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு மொத்தம் 8,003 அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.