சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து சிறுவன் படுகாயம்
படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.;
சென்னை,
சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியை சேர்ந்த டேனியல் என்பவர் தனது வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், டேனியலின் வளர்ப்பு நாய் சிறுவன் அர்ஜுன் மீது பாய்ந்து அவரை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.