தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு விசில், இனிப்பு வழங்கிய தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல்

பொது சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் கமிஷன் தவெகவுக்கு ஒதுக்கியுள்ளது.;

Update:2026-01-22 21:51 IST

தூத்துக்குடி,

தமிழ்நாடு சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் கமிஷன் தேர்தல் ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி இந்திய தேர்தல் கமிஷனில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. அதன்படி 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி ‘விசில்’ சின்னத்தை பொது சின்னமாக வழங்க கோரிக்கை விடுத்தது.

இதனை பரிசீலித்த இந்திய தேர்தல் கமிஷன், சலுகை அடிப்படையில் அந்த சின்னத்தை தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சிக்கு அனுமதித்து கடிதம் அனுப்பி இருக்கிறது. அந்தவகையில், த.வெ.க. வுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிக்கும் ஒரே பொது சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் கமிஷன் த.வெ.க.வுக்கு ஒதுக்கியுள்ளது.

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விசில் வழங்கி கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு வழங்கிய தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் விசில், இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து நிர்வாகிகளுடன் சேர்ந்து அஜிதா ஆக்னல் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் கட்சிப் பதவி விவகாரத்தில் விஜயின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு, கட்சித் தலைமை கண்டுகொள்ளாததால் மன அழுத்தத்தில் அதிகளவில் மாத்திரைகள் உட்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்