தமிழகத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 509 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 491 ஆக குறைந்துள்ளது.
மேலும் இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,064 ஆக அதிகரித்துள்ளது.