5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொறுப்பேற்பு

5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொறுப்பேற்பு;

Update:2022-07-29 01:42 IST

தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக பி.என்.ராஜா நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு சேலத்தில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வந்தார். தஞ்சையில் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பி.என்.ராஜா தெரிவித்தார்.

அதேபோல் கோவையை சேர்ந்த ஜாபர் சித்திக் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், வல்லம் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தஞ்சை மாவட்ட குற்ற பதிவேடு அலுவலக துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரிதிவ்ராஜ் சவுகான் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், தென்காசியை சேர்ந்த நித்யா வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்