கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு 4 இளைஞர்கள் பாலியல் தொல்லை - ராமேஸ்வரத்தில் பரபரப்பு

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.;

Update:2025-12-18 22:00 IST

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது சலையோரமாக மது போதையில் இருந்த 4 இளைஞர்கள், தம்பதியினர் நடந்து வருவதைப் பார்த்து அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

பின்னர் திடீரென கணவரை தாக்கிவிட்டு, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அலறி அடித்துக் கொண்டு அந்த 4 பேரிடம் இருந்து தப்பி ஓடி, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். இதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தனர். அதில் 3 பேர் தப்பியோடிய நிலையில், ஒரு நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்