திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த விஷயம்.. யாரோ சொல்லித்தான் தெரியவேண்டுமா? - அண்ணாமலை
திமுக ஒரு தீயசக்தி என்று விஜய் ஆவேசமாக பேசி இருந்தார்.;
திருப்பூர்,
ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது திமுக அரசை விஜய் கடுமையாக சாடினார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்று ஆவேசமாக பேசினார். அதேபோல, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தீய சக்திகளிடம் கவனமாக இருக்க வேண்டும், தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது என பேசி இருந்தார்.
இந்த நிலையில், திருப்பூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த விஷயம் என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது;
”திமுக ஒரு தீய சக்தி என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூறினர். பாஜக நீண்ட காலமாக கூறி வருகிறது. இதை யாரோ ஒருவர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சினிமா ஸ்டார், அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். சாதாரண வீட்டு பெண்மணி கூட திமுகவை தீயசக்தி என்று சொல்வதை நான் கேட்கிறேன். இதை முக்கியமான வார்த்தையாக நான் பார்க்கிறேன். சாதாரண, அடித்தட்டு மக்கள், திமுகவை தீய சக்தி என்று கூறுகின்றனர். அது வாக்குப்பெட்டியில் தெரியும். தீயசக்தி என்ற வார்த்தை, திமுகவின் அடையாளம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.”
இவ்வாறு அவர் கூறினார்.